TNPSC Thervupettagam

மன்கி-முண்டா அமைப்பு

September 20 , 2025 2 days 21 0
  • மன்கி-முண்டா அமைப்பு என்பது ஜார்க்கண்டின் கோல்ஹான் பகுதியில் உள்ள ஹோ பழங்குடியினரின் பாரம்பரிய சுயாட்சி மாதிரியாகும்.
  • இது முண்டாக்கள் எனப்படும் கிராமத் தலைவர்களாலும், மன்கிகள் எனப்படும் தொகுதித் தலைவர்களாலும் வழிநடத்தப்படுகிறது.
  • இந்த அமைப்பு ஆனது பிரச்சினைகளைத் தீர்த்து, வழக்கமானச் சட்டங்கள் மூலம் ஒழுங்கு முறையைப் பேணுகிறது.
  • இது நில வரி அல்லது வெளிப்புறக் கட்டுப்பாடு இல்லாமல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே தோன்றியது.
  • 1833 ஆம் ஆண்டில், கேப்டன் வில்கின்சன் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் 31 விதிகளாக அமைத்தார்.
  • முண்டாக்கள் மற்றும் மன்கிகள் பிரிட்டிஷ் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு இடையே இடைத்தரகர்களாக செயல்பட்டனர்.
  • ஒரு முண்டா ஒரு கிராமத்திற்குத் தலைமை தாங்குகிறார் அதே நேரத்தில் ஒரு மங்கி 8 முதல் 15 கிராமங்களை (பித்) மேற்பார்வையிடுகிறார்.
  • தலைமைப் பதவிகள் என்பவை பரம்பரையாக, தந்தையிடமிருந்து மகனுக்கு வழங்கப் படுகின்றன.
  • இந்த அமைப்பு ஆனது உள்ளாட்சி நிர்வாகத்திற்கான பரவலாக்கப்பட்ட கிராம சபை போலச் செயல்படுகிறது.
  • இது ஹோ பழங்குடியினரின் அடையாளம், மரபுகள் மற்றும் நில உரிமைகளைப் பாதுகாக்கிறது.
  • வேறு சட்ட மாற்றுகள் இல்லாததால் நீதிமன்றங்கள் வில்கின்சனின் விதிகளை நிலை நிறுத்தியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்