மன்சலா ஏரியானது வடக்கே மத்தியத் தரைக் கடலை ஒரு எல்லையாகக் கொண்டு எகிப்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
19 ஆம் நூற்றாண்டு வரை சுமார் 1,709 சதுர கிலோமீட்டராக இருந்த மன்சலா ஏரியின் பரப்பளவு 1907 மற்றும் 2016 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 67 சதவீதம் குறைந்து உள்ளது.
மிகை ஊட்ட நிலை ஆனது மேலும் 45 சதவீதப் பரப்பளவு குறைப்புக்குப் பங்களித்தது என்பதோடு தற்போது, இந்த ஏரியானது சுமார் 572.41 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது.
மன்சலா ஏரியில், அதன் பரப்பளவில் மொத்தம் 23 சதவீதத்தைக் கொண்டுள்ள சுமார் 304 தீவுகள் உள்ளன.
இந்த ஏரிக்கு அருகில் உலகின் மிகப்பெரிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆனது 2021 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
புனரமைப்பு தூர்வாரல் நடவடிக்கையானது, 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2022 ஆம் ஆண்டில் அதன் உப்புத் தன்மையை அதிகரித்து, ஏரியில் ஊட்டச் சத்துக்களைக் குறைத்தது.