1960 ஆம் ஆண்டுகளில் இருந்து நிகழ்ந்து வரும் பருவநிலை மாற்றம் மற்றும் பவளப் பாறை அகழ்ந்தெடுப்பு போன்ற மனித நடவடிக்கைகளால் மன்னார் வளைகுடாவில் உள்ள பவளப்பாறைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
சுகந்தி தேவதாசன் கடல் ஆராய்ச்சி நிறுவனம் (SDMRI) மற்றும் தமிழ்நாடு வனத் துறையைச் சேர்ந்த அறிவியலாளர்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வருடாந்திரக் கடலடிப் பவளப்பாறை மீளுருவாக்க ஆய்வுகளை நடத்தி வருகின்றனர்.
20 இனங்களைச் சேர்ந்த மொத்தம் 51,183 பவளப் பாறைத் துண்டுகள் 5,550 செயற்கை அடித்தள மூலக்கூறுகளில் உட்புகுத்தப் பட்டன.
இது சுமார் 40,000 சதுர மீட்டர் அளவிலான சிதைந்த பவளப் பாறைப் பகுதியை மீட்டெடுத்தது.
நடவு/இடமாற்றம் செய்யப்பட்ட பவளப் பாறைகளின் உயிர்வாழ்வு விகிதங்கள் 55.6% முதல் 79.5% வரை இருந்தன.
அக்ரோபோரா இன்டர்மீடியா இனமானது, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதிக உயிர் வாழ்வு (89.1%) மற்றும் வளர்ச்சி விகிதம் (ஆண்டிற்கு 16.7 செ.மீ) ஆகியவற்றினை வழங்கியுள்ளது.
2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், 10,600 செயற்கைப் பவளப் பாறை தொகுதிகள் (முக்கோணச் செயற்கைப் பவளப் பாறை - TAR மற்றும் துளைகளிடப்பட்ட சரிவக வடிவ செயற்கைப் பவளப் பாறை - PTAR) பயன்படுத்தப்பட்டன.
இது PTARகளில் 2004 ஆம் ஆண்டில் 1.23 ஆக இருந்த பவளப்பாறைச் சேர்ப்பு அடர்த்தியை 2020 ஆம் ஆண்டில் 76.01 ஆக அதிகரித்தது.
மீளுருவாக்கப்பட்ட இடங்களில் 2006 ஆம் ஆண்டில் 2.7% ஆக இருந்த உயிர்ப்பு பெற்றப் பவளப்பாறைகள் 2020 ஆம் ஆண்டில் 18.8% ஆக அதிகரித்தது என்ற நிலையில் இது மீட்டெடுக்கப்பட்ட இடங்களில் 1.8% ஆக மட்டுமே இருந்தது.
மீளுருவாக்கப்பட்ட இடங்களில் 2006 ஆம் ஆண்டில் 14.5 ஆக இருந்த மீன் எண்ணிக்கையின் அடர்த்தியானது 2020 ஆம் ஆண்டில் 310.0 ஆக வியத்தகு வகையில் உயர்ந்தது.
வான் தீவில் 63 மீன் இனங்களுக்கும், கோஸ்வரி தீவில் 51 இனங்களுக்கும் அவை வாழ்விடமளிக்கின்றன.
8,500 செயற்கைப் பவளப் பாறைத் தொகுதிகளை நிறுவச் செய்யவும், தரமிழந்த பவளப் பாறைகள் மற்றும் கடல் புல் படுக்கைகளை மீட்டெடுக்கவும் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு பெருங்கடல் வளங்களை நிலையான முறையில் பேணுதல் (TNSHORE) என்ற திட்டத்தைத் தொடங்கியது.