இந்திய அறிவியலாளர்கள், "மரபணு திருத்தம்" எனப்படும் 21 ஆம் நூற்றாண்டின் தாவர இனப்பெருக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இரண்டு புதிய பருவநிலை ஏற்பமைவு கொண்ட அரிசி வகைகளை உற்பத்தி செய்து வரலாறு படைத்துள்ளனர்.
இந்த மேம்படுத்தப்பட்ட அரிசி வகைகள் 'DRR Dhan 100 (Kamala)' மற்றும் 'Pusa DST Rice 1' என பெயரிடப்பட்டுள்ளன.
இந்த வகைகள் பருவநிலை ஏற்பமைவு கொண்டவை மற்றும் பருவநிலை தகவமைப்பு கொண்டவை என்று கருதப்படுகின்றன.
இதன் மூலம் பசுமை இல்ல வாயு உமிழ்வு ஆனது 20 சதவீதம் (32,000 டன்) குறைக்கப் படும்.
இதன் மூலம், மரபணுக்கள் திருத்தப்பட்ட அல்லது GE அரிசி வகைகளை உருவாக்கிய உலகின் முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
இரண்டு புதிய வகைகளிலும் அயல் டிஎன்ஏ பொருத்தப்படவில்லை என்பதால் அவை மரபணு மாற்றம் (GM) செய்யப்பட்டவை அல்ல.