மரபணு மாற்றப்பட்ட உயிரினப் பயிர்கள் (GMO) குறித்த FSSAI வழிகாட்டுதல்கள்
March 10 , 2021 1647 days 653 0
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (FSSAI) இறக்குமதி செய்யப்படும் உணவுப் பயிர்களில் 1% அளவில் மரபணு மாற்றப்பட்ட உயிரிப் பொருட்கள் இருப்பதற்கான அனுமதிக்கப்பட்ட வரம்பை ஏற்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.
இது உணவு மற்றும் சில இதர நுகர்வுப் பொருட்களில் GMO கூறுகளின் சுழிய (பூஜ்ஜிய) இருப்பிற்கான விவாதத்திற்கு இடமளிக்கின்றது.
இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுப் பொருட்களில் GMO நிலைகளை ஒழுங்குபடுத்தும் பணியானது தொடக்கத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழுவின் கீழ் இருந்தது.
தற்பொழுது இது 2006 ஆம் ஆண்டு முதல் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள FSSAI அமைப்பின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.
GMO மூலக்கூறில் மரபணுப் பொருளானது மரபணுப் பொறியியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்படும் அல்லது அவை செயற்கையான முறையில் உருவாக்கப்படும்.