மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளத்தின் கள சோதனைகள் 2025
July 21 , 2025 11 days 57 0
லூதியானாவில் உள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் காரீப் கால (கோடை) பயிர் பருவத்தில் இரண்டு வகையான மரபணு மாற்றம் செய்யப் பட்ட (GM) மக்காச்சோளத்தின் கள சோதனைகள் தொடங்க உள்ளன.
இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட (GM) மக்காச் சோள வகையானது களைக் கொல்லி எதிர்ப்புத் திறன் (HT) மற்றும் பூச்சிக்கொல்லி எதிர்ப்புத்திறன் (BT) ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது.
பேயர் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த மக்காச்சோள வகையானது BRL-I மற்றும் BRL-II உயிரியல் பாதுகாப்புச் சோதனை கட்டத்தில் உள்ளது.
களைக்கொல்லி-தாங்குதிறன் கொண்ட மக்காச்சோள கலப்பினங்களில் கிளைபோ சேட்-கே உப்பைப் பயன்படுத்துவதன் மூலம் களைக்கொல்லி எதிர்ப்புத் திறன் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட லெபிடோப்டிரான் பூச்சிகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட மக்காச் சோள கலப்பினங்களின் செயல்திறனை இந்த சோதனைகள் ஆய்வு செய்யும்.
2018 ஆம் ஆண்டில், பஞ்சாப் அரசாங்கமானது கிட்டத்தட்ட அனைத்துப் பயிர்களிலும் பல்வேறு வகையான களைகளைக் கட்டுப்படுத்துவதற்காக மாநிலத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் வகை களைக்கொல்லியின் விற்பனையைத் தடை செய்தது.
பஞ்சாப் மாநில அரசாங்கத்திடமிருந்து ஒப்புதல் பெற்ற பிறகு, மரபணுப் பொறியியல் மதிப்பீட்டுக் குழு (GEAC) ஆனது சோதனைகளுக்கு ஒப்புதல் அளித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த கள சோதனைகள் நடைபெற்றன.
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தில் (MoEF&CC) செயல் படுகின்ற GEAC ஆனது மரபணு மாற்றப்பட்டப் பயிர்கள் துறைக்கான நாட்டின் உயர் மட்ட ஒழுங்குமுறை அமைப்பாகும்.
GEAC என்பது 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் உருவாக்கப் பட்ட சட்டப்பூர்வக் குழுவாகும்.