மரபணு வெளிப்பாட்டின் புதிய இடஞ்சார்ந்த விதிமுறைகள்
November 2 , 2024 414 days 343 0
படியெடுத்தல் காரணிகள் என்பது நமது டிஎன்ஏவில் உள்ள தகவல்களைப் புரிந்து கொள்ள உதவும் சிறப்புப் புரதங்கள் ஆகும்.
அவை டிஎன்ஏவின் குறிப்பிட்ட பகுதிகளுடன் இணைக்கப்பட்டு, படியெடுத்தல் எனப் படும் செயல்முறையைத் தொடங்குகின்றன என்பதோடு இது டிஎன்ஏவிலிருந்து ஆர்என்ஏவுக்கு மரபணு தகவல்களை நகலெடுக்கிறது.
இந்தப் புதிய ஆராய்ச்சியானது, படியெடுத்தல் தொடங்கும் இடத்துடன் தொடர்பு உடைய, படியெடுத்தல் காரணி இணையும் தளத்தின் இருப்பிடத்தைப் பொறுத்து, படியெடுக்கப்படும் மரபணுவின் பல மாறுதல்களைச் சார்ந்துள்ளது என்பதை நன்கு கண்டறிந்துள்ளது.
ஒரே படியெடுத்தல் காரணிகளின் வெவ்வேறு இடஞ்சார்ந்த அமைவுகள் ஆனது எவ்வாறு வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பற்றிய நுண்ணறிவை இது வழங்குகிறது.
இதன் கண்டுபிடிப்புகள் ஆனது, "மரபணு வெளிப்பாட்டைக் கணிக்கும் பல மரபணு செயற் கருவிகள் மற்றும் வழிமுறைகளை வகைப்படுத்திக் கண்டறிந்து செம்மைப் படுத்தவும் உதவும்".