TNPSC Thervupettagam

மருங்கூர் அகழ்வாராய்ச்சி 2025

July 27 , 2025 16 days 85 0
  • கடலூர் மாவட்டத்தில் உள்ள மருங்கூர் அகழ்வாராய்ச்சியைத் தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறை (TNSDA) நிறைவு செய்துள்ளது.
  • இரும்புக் காலம் முதல் முந்தைய வரலாற்றுக் காலம் வரையிலான ஒரு குடியிருப்பு மற்றும் புதைவிட தளத்தில் இது அகழ்வாராய்ச்சி நடத்தி வந்தது.
  • இது தென்பெண்ணை மற்றும் வட வெள்ளார் ஆறுகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
  • இது பண்டைய கால நடுவில் மண்டலம் என்பதன் ஒரு பகுதியாக இருந்தது.
  • இந்த இடத்தின் பல்வேறு பண்புகளை மதிப்பிடுவதற்கு ஆளில்லா வான்வழி வாகனம் (UAV) மூலமான வரைபடமிடுதல் மற்றும் LiDAR (ஒளியைப் பயன்படுத்தி கண்டறிதல் மற்றும் வரம்பினை அறிதல்) போன்ற தொலை உணர்திறன் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
  • தமிழ்நாட்டில் குடியிருப்பு மேடும், அதனுடன் தொடர்புடைய புதைவிடத் தளமும் கண்டுபிடிக்கப் பட்ட சில இடங்களில் மருங்கூர் ஒன்றாகும்.
  • இங்கு குடியிருப்பு மேடும் புதைவிட தளமும் சராசரி கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பது தெரியவந்தது.
  • 2024 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று அரசு, இதனை மாநிலத்தின் தலைமைச் செயலகத்திலிருந்து மருங்கூரில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியது.
  • சிவகங்கை மாவட்டத்தில் கீழடி மற்றும் அதன் தொகுப்பு (கொந்தகை); விருதுநகரில் வெம்பக்கோட்டை; திருவண்ணாமலையில் கீழ்நமண்டி; புதுக்கோட்டையில் பொற்பனைக்கோட்டை; தென்காசியில் திருமலாபுரம்; கிருஷ்ணகிரியில் சென்னனூர்; மற்றும் திருப்பூரில் கொங்கல்நகரம் ஆகிய இடங்களின் அகழ்வாராய்ச்சிகளுடன் இது மேற்கொள்ளப் பட்டது.
  • மருங்கூரில் உள்ள ஒரு முதுமக்கள் தாழி புதைவிட இடத்தில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மூன்று மட்பாண்டத் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் உள்ள எந்தவொரு தொல்பொருள் தளத்திலிருந்தும், பொதுவாக முதுமக்கள் தாழி புதைவிட இடத்தில் கல்லறைப் பொருட்களாக வைக்கப்படும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானைகள் கண்டெடுக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
  • அதில் ஒன்றில் “அ-தி-ய்(அ)-க-ன்” என்றும், மற்றவற்றில் “அ-மா-ன்மற்றும் “அ-த” என்றும் பொறிக்கப்பட்டுள்ளது.
  • இந்தப் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகள் பழங்காலவியல் அடிப்படையில் கிமு இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம்.
  • தமிழ்-பிராமி எழுத்துகள் கொண்ட பானைத் துண்டுகள், சுடுமண்பாண்டங்கள், நுண் கற்கள், மணிகள், எலும்புக் கருவிகள், சங்கு ஓடுகள், இரும்புக் கருவிகள், ஆண்டிமனி தண்டுகள் மற்றும் சோழர் கால நாணயங்கள் உட்பட 95 பொருட்களும் இங்கு கண்டெடுக்கப்பட்டன.
  • செறிவான லேட்டரைட் கல் வட்டங்கள் கொண்ட பெருங்கற்கால பானைத் துண்டுகள், கல்லறைப் பொருட்கள், இரும்பு வாள்கள் மற்றும் ஜாஸ்பர் மணிகள் இங்கு கண்டெடுக்கப் பட்டன.
  • அகழி அடுக்குகள் 6 மீட்டர் வரை தெளிவான மானுடவியல் செயல்பாட்டைக் காட்டின என்பதோடு இது அங்கு தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு இருந்தததையும் வெளிப் படுத்தியது.
  • கருப்பு மற்றும் சிவப்பு மட்பாண்டம், சிவப்பு மட்பாண்டம், செம்பூச்சு மட்கலன், கரடு முரடான மேற்பரப்புடைய சிவப்பு மட்பாண்டம், நுணுக்கமான வடிவமைப்புகளைக் கொண்ட கூரிய பல் அமைப்பு கொண்ட பாத்திரங்கள், சாம்பல் நிற கூரிய பல் அமைப்பு கொண்ட பாத்திரங்கள், பழுப்பு நிற பூச்சு பூசப்பட்ட பாத்திரங்கள் மற்றும் துளையிடப்பட்ட பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பானைத் துண்டுகள் இந்த அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டன என்பதோடு இது பீங்கான் பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க பன்முகத்தன்மையைக் குறிக்கிறது.
  • அவற்றில் சில சிந்து நதி அடையாளங்களை ஒத்த வரைபடங்களைக் கொண்டிருந்த படங்களை கொண்ட 12 பானைத் துண்டுகளும் அடங்கும்.
  • மட்பாண்டங்கள் மற்றும் சுடுமண் பாண்டச் சக்கரங்களின் மேற்பரப்பை மெருகூட்டப் பயன்படுத்தப்படும் பல மெருகேற்றுக் கருவிகளும் இங்கு கண்டெடுக்கப்பட்டன.
  • இங்கு தோண்டி எடுக்கப்பட்ட ஆண்டிமனி தண்டுகளின் மழுங்கிய விளிம்புகள் அவை அலங்கார நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதைக் குறிக்கின்றன.
  • முதலாம் இராஜராஜ சோழன் காலத்தைச் சேர்ந்த ஓர் இடைக்கால செப்பு நாணயமும் இங்கு மேல் அடுக்குகளிலிருந்து கண்டெடுக்கப்பட்டது.
  • அதே பாறைப்படிவியல் அடுக்கிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட நிலக்கரி மாதிரிகள் கதிரியக்கக் காலக் கணிப்பு மற்றும் சூழ்நிலைப் பகுப்பாய்வுக்கான வாய்ப்பையும் வழங்கியது.
  • 7 செ. மீ நீளம் கொண்ட ஓர் சங்கு உள்ளிட்ட இரண்டு சங்குகளின் உள் ஓடுகள் 3.6 மீட்டர் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டன.
  • மூன்று துண்டுகளாக உடைக்கப்பட்ட, 22.97 கிராம் எடையும் 2.8 மி.மீ தடிமனும் கொண்ட 13 செ.மீ நீளமுள்ள இரும்புக் கத்தியும் இங்கு 2.57 மீட்டர் ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப் பட்டது.
  • ஒரு முந்திரித் தோப்பில் அமைந்துள்ள புதைவிடத்தில், தொல்பொருள் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இரண்டு அகழிகளைத் தோண்டினர்.
  • அங்கு அகழ்வாராய்ச்சியின் போது, இரண்டு லேட்டரைட் கல் வட்டங்கள் அடையாளம் காணப்பட்டது, இது பெருங்கற்கால புதைவிடங்கள் இங்கு இருப்பதை உறுதிப் படுத்தியது.
  • முதல் பெருங்கற்கால அமைப்பு ஆனது, எட்டு மீட்டர் விட்டம் கொண்ட ஒரு லேட்டரைட் கல் வட்டத்தை வெளிப்படுத்தியது.
  • இந்த வட்டத்தின் மேற்பரப்பு சிறிய லேட்டரைட் கற்களால் மூடப் பட்டிருந்தது.
  • இது இரண்டு பெரிய கல் வட்டங்களை வெளிக்கொணர்ந்தது.
  • அவை நடுத்தர அளவிலான லேட்டரைட் கற்களால் ஆன உள் வட்டமாகவும், பெரிய கற்களின் வெளிப்புற அமைப்பாகவும் இருந்தன.
  • இந்தக் கல் வட்டம் முறையான அகழ்வாராய்ச்சிக்காக நான்கு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டது.
  • இதன் ஆரம்ப அடுக்குகள் கடினமான லேட்டரைட் கற்களைக் கொண்டிருந்தன.
  • இதன் மையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய கேப்ஸ்டோன் கீழே உள்ள புதைக்கப்பட்ட முதுமக்கள் தாழியைப் பாதுகாக்க வைக்கப் பட்டது.
  • இந்த முதுமக்கள் தாழி ஒரு லேட்டரைட் அடிவாரக் குழிக்குள் வைக்கப்பட்டது.
  • இரண்டாவது பெருங்கற்காலப் புதைவிடப் பகுதியில், லேட்டரைட் அடுக்குகளுக்குக் கீழே, ஒரு மெல்லிய சிவப்பு மண் அடுக்கு காணப்பட்டது.
  • அதிலிருந்து, சிவப்புப் பாண்டங்களால் செய்யப்பட்ட எட்டு முதுமக்கள் தாழிகள் வெவ்வேறு நிலைகளிலும் வெவ்வேறு அளவுகளிலும் தென்பட்டன.
  • இந்த இரண்டு முதுமக்கள் தாழிகளுக்கு வெளியே இரும்பு வாள்களும், அதே நேரத்தில் முதுமக்கள் தாழிகளுக்குள் இரும்புப் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
  • இரண்டு அகழிகளிலும், முதுமக்கள் தாழிகளைச் சுற்றி படையல் பானைகள் கண்டெடுக்கப் பட்டன.
  • இவற்றில் கருப்பு மற்றும் சிவப்பு பாண்டங்கள், சிவப்பு நிறப் பூச்சு பூசப்பட்ட பாண்டங்கள், கருப்பு நிறப் பூச்சு பூசப்பட்ட பாண்டங்கள் மற்றும் சிவப்பு நிறப் பாண்டங்கள் ஆகியவை அடங்கும்.
  • இந்தக் கரி மாதிரிகள், அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வு மையத்திற்கு, அதன் கால கணக்கீடு செய்வதற்காக துகள் முடுக்கி மூலமான திரள் நிறமாலை பகுப்பாய்விற்காக அனுப்பப்படும்.
  • அதே சமயம் இங்கு சேகரிக்கப்பட்ட மகரந்த மாதிரிகள் பாண்டிச்சேரியின் பிரெஞ்சு நிறுவனத்திற்கு அனுப்பப்படும்.
  • மேலும், தொல்பொருள்-தாவரவியல் ஆய்வுகள், பைட்டோலித் (திடத் தாவரப் பதிவுகள்) மற்றும் பாறையியல் பகுப்பாய்வுகள் மற்றும் ஒளியியல் ரீதியாக தூண்டப்பட்ட ஒளிர்வு மற்றும் வெப்ப ஒளிர்வு காலக் கணிப்பு ஆகியவை படிவுகள் மற்றும் மட்பாண்டங்களின் வெப்பம் அல்லது ஒளி வெளிப்பாடுகளைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப் படும்.
  • சென்னை பல்கலைக்கழகம் ஏற்கனவே மருங்கூர் அருகே, காரைக்காடு மற்றும் குடிகாடு ஆகிய இடங்களில் அகழ்வாராய்ச்சிகளை நடத்தியது.
  • இந்தத் தளம் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள அரிக்கமேடு மற்றும் மயிலாடு துறை மாவட்டத்தில் உள்ள பூம்புகார் போன்ற பழங்காலத் துறைமுக நகரங்களுக்கு அருகில் அமைந்துள்ளது என்பதால் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
  • 2025-26 ஆம் ஆண்டில் அகழ்வாராய்ச்சிகளை நடத்துவதற்காக மருங்கூரிலிருந்து கிட்டத்தட்ட 30 கி.மீ தொலைவில் உள்ள மணிக்கொல்லையில் முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள தமிழ்நாடு மாநிலத் தொல்பொருள் துறை திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்