மருத்துவ ஆக்சிஜன்களை ஒதுக்கீடு செய்வதற்கான சிறப்பு தேசியப் படை
May 13 , 2021 1557 days 726 0
கோவிட்-19 பெருந்தொற்று காலங்களில் மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஆகியவற்றிற்கான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீட்டினை மேற்கொள்ளச் செய்வதற்கான வழிமுறைகளை வகுப்பதில் உதவுவதற்காக வேண்டி 12 உறுப்பினர்கள் கொண்ட சிறப்பு தேசியப் படை ஒன்றினை இந்திய உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது.
இந்தப் படையின் பதவிக் காலம் தற்போதைக்கு 6 மாதங்களாக நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.
இதில், இரு தலைமை அலுவலர்களைநியமிக்குமாறு உச்சநீதிமன்றமானது மத்திய அரசிடம் கோரியுள்ளது.
சிறப்புப் படைக்குத் தேவையான தளவாடங்கள், தகவல் தொடர்பு மற்றும் அதன் காணொலிச் சந்திப்புகளை ஏற்பாடு செய்தல் போன்றவை இந்தத் தலைமை அலுவலர்களின் பொறுப்பாகும்.