மத்திய அரசானது மருத்துவ ஆக்ஸிஜனை எளிமையான முறையிலும் தடையற்ற வகையிலும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.
மருத்துவ ஆக்ஸிஜன் ஆனது அத்தியாவசிய மருந்துகளின் தேசியப் பட்டியலிலும் (NLEM - National List of Essential medicines) உலகச் சுகாதார அமைப்பின் (WHO) அத்தியாவசிய மருந்துகளுக்கான ஒரு மாதிரிப் பட்டியலிலும் உள்ளது.
மருத்துவ ஆக்ஸிஜன் என்பது ஒரு தூய்மையான ஆக்ஸிஜன் ஆகும்.
இது 99.5% தூய்மையான ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது.
பொதுவாக, நாம் சுவாசிக்கும் காற்றானது 21% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது.
வளிமண்டலத்தில் மாசுத் துகள்கள் அதிகரிக்கும்போது, ஆக்ஸிஜனின் செறிவானது குறைகின்றது.
NLEM என்பது WHO அமைப்பின் அத்தியாவசிய மருந்துப் பட்டியலின் ஒரு மாதிரியாகும்.
அத்தியாவசிய மருந்துகள் என்பது உலகில் மக்களின் முன்னுரிமை சுகாதாரச் தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய மருந்துகளாகும்.
1970 ஆம் ஆண்டில் அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலைத் தயாரித்த உலகின் முதலாவது நாடு தான்சானியா ஆகும்.
1977 ஆம் ஆண்டில் WHO ஆனது அத்தியாவசிய மருந்துகளின் பட்டியலை வெளியிட்டது.
இந்தியாவின் முதலாவது NLEM ஆனது 1993 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
2018 ஆம் ஆண்டில், இந்தப் பட்டியலில் 851 மருந்துகள் சேர்க்கப்பட்டு, புதுப்பிக்கப் பட்டது.