அதிக ஏற்றுமதித் திறன் கொண்ட மருத்துவச் சாதனங்களின் பட்டியலை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலானது முன்னுரிமை முறையில் மானியங்களை வழங்குவதற்காக 10 சாதனங்களுடன் வெளியிடப் பட்டுள்ளது.
இதில் அறுவைச் சிகிச்சை கத்திகள், எலும்பியல் உட்பொருத்திகள், வடிகுழாய்கள், மருந்தேற்றுக்குழல் & ஊசிகள், எக்ஸ்ரே இயந்திரங்கள், இரத்தப் பைகள், எம்ஆர்ஐ இயந்திரங்கள் மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை அடங்கும்.
இந்த மருத்துவச் சாதனங்கள் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (Central Drugs Standard Control organization - CDSCO) கீழ் நிர்வகிக்கப் படுகின்றன.
CDSCO
இது மருந்துகள் மற்றும் அழகு சாதனச் சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவச் சாதனங்களுக்கான தேசிய ஒழுங்குமுறை அமைப்பாகும்.
இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகின்றது.