TNPSC Thervupettagam

மருத்துவ சாதனங்களை மீண்டும் பயன்படுத்துவதற்குத் தடை

October 27 , 2026 4 days 71 0
  • பொது மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சைக்கான ஒருமுறை பயன்படுத்தும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (DGHS) உத்தரவிட்டுள்ளது.
  • அத்தகைய சாதனங்களை மீண்டும் பயன்படுத்துவதால், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் குறுக்கு-தொற்று, சாதனத்தின் கோளாறு மற்றும் குறைவான செயல்திறன் போன்றவை ஏற்படலாம்.
  • இருதயவியல், சிறுநீரகவியல், புற்றுநோயியல், நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் இதய-மார்பு மற்றும் இரத்த நாள அறுவை சிகிச்சை (CTVS) ஆகியவற்றில் பயன்படுத்தப் படும் சாதனங்கள் இந்த உத்தரவின் கீழ் வருகின்றன.
  • ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை எனப் பெயரிடப்பட்ட சாதனங்கள் மூல உபகரண உற்பத்தியாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.
  • மாநில சுகாதார அதிகாரிகள் மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டாளர்கள் இதனை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும், விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளனர்.
  • இந்த நடைமுறையானது மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940, மருத்துவ சாதனங்கள் விதிகள் 2017 மற்றும் மருத்துவ நிறுவனங்கள் சட்டம் 2010 ஆகியவற்றின் விதிமுறைகளை மீறுவதாக அமையலாம்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்