TNPSC Thervupettagam

மருத்துவச் சாதனங்களுக்கான ஏற்றுமதி மேம்பாட்டுச் சபை

September 27 , 2022 1049 days 429 0
  • புதிய ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையானது, உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா விரைவுச் சாலை தொழில்துறை மேம்பாட்டு ஆணையத்தில் (YEIDA) தனது தலைமையகத்தினை நிறுவ உள்ளது.
  • அதன் பிராந்திய அலுவலகங்கள் விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத் ஆகிய இடங்களில் அமைய உள்ளன.
  • இது அரசு மற்றும் மருத்துவச் சாதனங்கள் துறையில் இருந்து நியமனம் செய்யப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோர் இடம் பெற்ற ஒரு நிர்வாகக் குழுவினால் மேற்பார்வையிடப்படும்.
  • ஏற்றுமதி மேம்பாட்டுச் சபையானது உலகளாவியச் சந்தையில் மருத்துவ சாதனங்கள் மீதான ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் அவற்றின் மேம்பாட்டிற்கு உதவும்.
  • இது வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழான மருந்துத் துறையின் கீழ் இயங்கும்.
  • 2022 ஆம் நிதியாண்டில் ரூ.23,766 கோடி மதிப்புள்ள மருத்துவச் சாதனங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.
  • இது முந்தைய ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ.19,736 கோடி என்ற மதிப்புடன் ஒப்பிடச் செய்கையில் அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்