“க்ரீன்போன் சஸ்டைனபிள் ரெஸைலன்ஸ்” என்ற ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு இணையவழிக் குற்றப் பாதுகாப்பு நிறுவனமானது மருத்துவத் தரவுகள் கசிவு தொடர்பான தனது இரண்டாவது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையின் படி, 120 மில்லியனுக்கும் அதிகமான இந்திய நோயாளிகளின் மருத்துவ விவரங்கள் கசிந்து இணையத்தில் இலவசமாக கிடைக்கப் பெற்றுள்ளன.
இதன் முதலாவது அறிக்கை வெளியான பின்னர் அரசாங்கங்களினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், நல்ல, மோசமான மற்றும் மிகவும் மோசமான என்ற மூன்று பிரிவுகளில் இது நாடுகளை வகைப்படுத்துகின்றது.
இதன் முதலாவது அறிக்கையானது 2019 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியிடப் பட்டது.
இந்த அறிக்கையின் "மிகவும் மோசமான" பிரிவில் அமெரிக்காவிற்கு அடுத்து இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
தரவுகள் கசிவால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இதைத் தொடர்ந்து கர்நாடகா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.