மருத்துவத் தாவர வகை உயிரினங்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு
February 13 , 2019 2364 days 737 0
இந்திய தாவரவியல் ஆய்வு நிறுவனத்தின் தகவலின் படி, இந்தியாவில் 8000க்கும் மேற்பட்ட மருத்துவத் தாவர வகை உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய மருத்துவ வகைத் தாவரங்கள் மன்றம், நாடு முழுவதும் மருத்துவ வகைத் தாவரங்களைப் பயிரிடுதல், பாதுகாத்தல், செயல்முறைப்படுத்தல் மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக பின்வரும் திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றது.
மத்திய அரசால் நிதியுதவி அளிக்கப்படும் திட்டமான தேசிய ஆயுஷ் திட்டம்
மருத்துவக் குணமுள்ள தாவரங்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் நீடித்த மேலாண்மை என்பதன் மீது மத்தியத் துறைத் திட்டம்.
மருத்துவக் குணமுடைய தாவரங்களின் உற்பத்திக்கான விருப்ப சான்றளிப்புத் திட்டம்