TNPSC Thervupettagam

மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சுற்றுலா மேம்பாட்டிற்கான தேசிய உத்தி மற்றும் செயல்திட்டம்

April 1 , 2023 868 days 352 0
  • சுற்றுலாத் துறை அமைச்சகம் இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்தக் கொள்கையானது இந்தியாவில் மருத்துவ மதிப்பு சார்ந்தச் சுற்றுலா உருவாக்கத்திற்கான முக்கியத் தூண்களாகப் பின்வரும் சில பிரிவுகளை அடையாளம் கண்டுள்ளது.
    • இந்தியாவினை ஆரோக்கியம் சார்ந்த சேவைகளுக்கான ஒரு தளமாக உருவாக்கச் செய்தல்.
    • மருத்துவம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த சுற்றுலாவிற்கான சூழல் அமைப்பினை வலுப்படுத்துதல்.
    • இயங்கலை மருத்துவ மதிப்பு சார் சுற்றுலா (MVT) இணைய தளத்தினை அமைப்பதன் மூலம் எண்மமயமாக்கலைச் செயல்படுத்துதல்.
    • மருத்துவ மதிப்பு சார் சுற்றுலாவிற்கான அணுகலை மேம்படுத்துதல்.
    • ஆரோக்கியம் சார்ந்த சேவைகளுக்கான சுற்றுலாவினை ஊக்குவித்தல்.
    • நிர்வாகம் மற்றும் நிறுவனம் சார்ந்த கட்டமைப்பு.
  • 156 நாடுகளுக்காக ‘மின்னணு-மருத்துவ நுழைவு இசைவுச் சீட்டு’ மற்றும் ‘மின்னணு-நோயாளியின் துணையாளர் நுழைவு இசைவுச் சீட்டு’ ஆகியவையும் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.
  • 2020 ஆம் ஆண்டில் 1.83 லட்சமாக இருந்த மருத்துவ நோக்கத்திற்காக இந்தியா வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையானது 2021 ஆம் ஆண்டில் 3.04 லட்சமாக அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்