TNPSC Thervupettagam

மருந்தியல் ஆணையம்

June 6 , 2020 1796 days 673 0
  • மத்திய ஆயுஷ் துறை அமைச்சகத்தின் கீழ், உள்ள இந்திய மருந்து மற்றும் ஹோமியோபதிக்கான மருந்தியல் ஆணையத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கு வேண்டி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இந்த ஆணையமானது இந்திய மருத்துவத்திற்கான மருந்தியல் ஆய்வகம் மற்றும் ஹோமியோபதி மருந்தியல் ஆய்வகம் ஆகியவற்றை ஒன்றிணைப்பதன் மூலம் ஏற்படுத்தப் படுகின்றது.
  • இது ஆயுர்வேதா, சித்தா, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய மருத்துவத்திற்கான மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதையும் அவற்றின் ஒழுங்குமுறைகளை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உள்ளது.
  • இந்த ஆணையம் மத்திய ஆயுஷ் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனிச் சுதந்திர அமைப்பாகும்.
  • மருந்தியல் என்பது மருந்து உற்பத்தி செய்தலைக் குறிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்