January 7 , 2026
2 days
43
- உலக சுகாதார அமைப்பின் (WHO) கீழ் மருந்தியல் கண்காணிப்பு (மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு) பங்களிப்புகளில் இந்தியா உலகளவில் 8வது இடத்தைப் பிடித்தது.
- இது ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக, 123வது தரவரிசையில் இருந்து பதிவான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
- புது டெல்லியில் நடைபெற்ற இந்திய மருந்தியல் ஆய்வுக் கட்டுரை 2026 (10வது பதிப்பு) வெளியீட்டின் போது இந்த சாதனைப் பதிவு குறித்து அறிவிக்கப்பட்டது.
- இந்திய மருந்தியல் ஆய்வுக் கட்டுரை 2026 ஆனது 121 புதிய தனிக் கட்டுரைகளைச் சேர்த்ததுடன் அதன் மொத்த எண்ணிக்கை 3,340 ஆக உயர்ந்தது.
- முதன்முறையாக இருபது இரத்தக் கூறு தனிம விளக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், இந்தியா அவ்வாறு செய்த முதல் நாடாக மாறியது.
- இந்திய மருந்தியல் ஆய்வுக் கட்டுரை ஆனது 19 உலகளாவிய தென் நாடுகளில் அதிகாரப் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

Post Views:
43