18 மாநில மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையங்களானது, மருந்து உரிம செயலாக்கத்திற்காக இயங்கலை வழி தேசிய மருந்து உரிம முறையை (ONDLS) ஏற்று உள்ளன.
எந்த மாநில அரசும், திருத்தம் மற்றும் தடுப்பு நடவடிக்கை (CAPA) வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றவில்லை.
ONDLS மற்றும் CAPA ஆகிய இரண்டும், இந்தியாவின் மருந்து உற்பத்தி விதிமுறைகளைப் புதுப்பிக்கின்ற மத்திய அரசின் திருத்தப்பட்ட M அட்டவணையின் கீழ் உள்ள விதிகள் ஆகும்.
CAPA என்பது மருந்து உற்பத்தியில் உள்ள சிக்கல்களை விசாரித்து தடுப்பதில் கவனம் செலுத்தும் ஒரு தர மேலாண்மை முறையாகும்.
ONDLS என்பது அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் மருந்து உரிமத்தை நெறிப்படுத்துவதற்கும் தரப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் ஒற்றை சாளரத் தளமாகும்.
5,308 MSME மருந்து நிறுவனங்களில், 3,838 நிறுவனங்கள் ஆனது திருத்தப்பட்ட அட்டவணை M சார்ந்த முறையான உற்பத்தி நடைமுறைகளுக்கு (GMP) இணங்கி உள்ளன.