மருந்து மற்றும் மருத்துவச் சாதனங்கள் குறித்த கருத்தரங்கு
March 1 , 2021 1594 days 744 0
மருந்து மற்றும் மருத்துவச் சாதனத் துறை குறித்த சர்வதேசக் கருத்தரங்கின் 6வது பதிப்பானது மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களால் தொடங்கி வைக்கப் பட்டது.
இந்தக் கருத்தரங்கானது “INDIA PHARMA 2021 & INDIA MEDICAL DEVICE 2021” என்ற கருத்தை உள்ளடக்கி உள்ளது.
இது மருந்து மற்றும் மருத்துவச் சாதனைத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சிறந்த தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் உற்பத்தியை ஏற்படுத்துவதையும் அவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாக் கொண்டுள்ளது.
இந்திய மருந்து 2021 என்ற மாநாட்டின் கருத்துரு ‘Indian Pharma Industry: “Future is Now” என்பதாகும்.
“இந்திய மருத்துவ சாதனம் - 2021” என்பதின் கருத்துரு, “இந்திய மருத்துவத் தொழில்நுட்ப எதிர்காலம் : உலகக் கூட்டிணைவின் மூலம் புத்தாக்கம் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம்” என்பதாகும்.