தேசிய மருந்துகள் விலை நிர்ணய ஆணையமானது (National Pharmaceuticals Pricing Authority - NPPA) முதன்முறையாக 2013 ஆம் ஆண்டு மருந்து விலைக் கட்டுப்பாட்டு ஆணையைப் பிறப்பித்தது .
இந்த ஆணையானது மருந்துகளின் கிடைக்கும் தன்மையை உறுதிப்படுத்துவதற்காக 21 மருந்துகளின் விலையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
NPPA ஆனது மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் மருந்துத் துறையில் ஒரு இணைக்கப்பட்ட அலுவலகமாக அமைக்கப் பட்டுள்ளது.