மருந்துகளுக்கான அணுகல் அறக்கட்டளையின் 2024 ஆம் ஆண்டு அறிக்கை
December 2 , 2024 384 days 341 0
இது மிக குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் (LMIC) அவற்றின் தயாரிப்புகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் குறித்து 20 முன்னணி மருந்து நிறுவனங்களை மதிப்பீடு செய்தது.
2022 ஆம் ஆண்டு குறியீட்டுடன் ஒப்பிடுகையில் ஒட்டு மொத்தத் தொழில் துறை செயல் திறன் குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு குறியீட்டில் பதிவான 65 சதவீதத்துடன் ஒப்பிடும் போது, மதிப்பிடப் பட்டத் தயாரிப்புகளில் சுமார் 61 சதவீதம் ஆனது குறைவான வருமானம் கொண்ட நாடுகளுக்கான அணுகல் உத்திகளைக் கொண்டிருக்கவில்லை.
113 LMIC நாடுகளில் 43 சதவீத மருத்துவ பரிசோதனைகள் மட்டுமே நடைபெறுகின்றன.