மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் மருத்துவ சாதனங்கள்
February 14 , 2020 2013 days 703 0
2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல், நாட்டில் விற்கப்படும் அனைத்து மருத்துவச் சாதனங்களும் மருந்துகளாக கருதப்படும். மேலும் அவை 1940 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் கீழ் கட்டுப்படுத்தப்படும்.
இந்த அறிவிப்பை மத்தியச் சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மருந்துப் பொருட்கள் தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுடன் கலந்தாலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
1940 ஆம் ஆண்டின் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டமானது இந்தியாவில் மருந்துப் பொருட்களின் இறக்குமதி, உற்பத்தி மற்றும் விநியோகத்தை ஒழுங்குபடுத்துகின்றது.