மருந்துகள் மற்றும் மருத்துவ முன்னோட்ட விதிகள் - 2019
March 29 , 2019 2321 days 695 0
மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகமானது நாட்டில் மருத்துவ ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மருந்துகள் மற்றும் மருத்துவ சோதனை விதிகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய விதிகளானது நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகள் குழுவால் சோதனைகளை கண்காணித்து பாதகமான நிகழ்வுகளின் வழக்குகளில் இழப்பீட்டின் அளவு முடிவு செய்யப்படுவதை உறுதி செய்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராச்சியம், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு விற்பனையாகும் மருந்துகளுக்கு மருத்துவ சோதனையினை இந்திய பொது மருந்துக் கட்டுபாட்டாளர் நீக்கி உள்ளார்.
மருத்துவ சோதனை என்பது ஒரு புதிய மருந்தானது மனிதர்களுக்கு பயனுள்ளதாகவும் பாகாப்பானதாகவும் இருக்குமா என்பதைத் தீர்மானிக்கும் ஒரு ஆய்வு ஆகும்.