மருந்துத் துறையின் முதலாவது உலகப் புத்தாக்க உச்சி மாநாடு
November 20 , 2021 1356 days 547 0
"மருந்துத் துறையின் முதலாவது உலகப் புத்தாக்க உச்சி மாநாட்டினை" பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்த உச்சி மாநாடானது, அரசாங்கம், கல்வித்துறை, தொழில்துறை, முதலீட்டாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழுமங்களைச் சேர்ந்த முக்கியமான இந்திய மற்றும் சர்வதேசப் பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது இந்தியாவின் மருந்துத் துறையில் ஒரு புதுமை படைக்கும் சூழலை உருவாக்கச் செய்வதற்கான முன்னுரிமைகள் பற்றி விவாதிப்பதற்கும் அவற்றை மூலோபாயப் படுத்துவதற்கும் ஆகும்.
இந்த உச்சி மாநாடானது, வளர்ச்சிக்கான பெரும் திறன்கள் கொண்ட இந்திய மருந்துத் துறையில் உள்ள வாய்ப்புகளை எடுத்துக்காட்டுகிறது.