இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட மர்மகோவா எனப்படும் ரேடார் கருவிகளுக்குப் புலப்படாத அழிப்புக் கப்பலின் முதல் கடல்பயிற்சியினை அரபிக்கடலில் இந்தியக் கடற்படை மேற்கொண்டது.
இந்தப் போர்க் கப்பலானது P-15B என்ற திட்டத்தின் கீழ் கட்டமைக்கப் பட்டது.
போர்ச்சுக்கீசிய ஆட்சியிலிருந்து கோவா விடுவிக்கப்பட்ட 60 ஆண்டு நிறைவுடன் இதன் உருவாக்கம் ஒன்றிணைந்து மேற்கொள்ளப் பட்டது.
மர்மகோவா, P-15B திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே கட்டமைக்கப்படும் இரண்டாவது மிகப்பெரிய ரேடாருக்குப் புலப்படாத அழிப்புக் கப்பலாகும்.
இந்தக் அழிப்புகப்பலானது மேசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப் பட்டது.