TNPSC Thervupettagam

மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்ட வடிவமைப்பு குழு

July 2 , 2026 9 hrs 0 min 54 0
  • தமிழ்நாடு அரசு பாடத்திட்ட வடிவமைப்பு குழுவை திருத்தியமைத்து, அதன் புதிய தலைவராக மயில்சாமி அண்ணாதுரையை நியமித்துள்ளது.
  • மயில்சாமி அண்ணாதுரை சுல்தான் அகமது இஸ்மாயிலுக்குப் பதிலாக நியமிக்கப் பட்டுள்ள அதே வேளையில் குழுவின் பிற உறுப்பினர்கள் அனைவரும் தக்க வைக்கப் பட்டுள்ளனர்.
  • மாநில பள்ளிப் பாடத்திட்டத்தின் திருத்தத்திற்கு வழிகாட்ட இக்குழுவிற்கு மூன்றாண்டு பதவிக்காலம் வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டின் பள்ளிப் பாடத்திட்ட சீரமைப்பின் ஒரு பகுதியாக இக்குழு முதலில் 2025 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
  • 1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையிலான பாடப் புத்தகங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு உயர் வகுப்புகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்