TNPSC Thervupettagam

மறைந்திருந்த கருந்துளைகள்

July 15 , 2026 13 days 112 0
  • அருகிலுள்ள விண்மீன் திரள்களில் மங்கலான, பலவீனமாகச் செயல்படும் மிகப் பெரிய கருந்துளைகளின் மறைந்திருந்த ஒரு தொகுப்பை வானியலாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.
  • இந்திய ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய ஒரு சர்வதேசக் குழுவால் e-MERLIN (மேம்படுத்த ப்பட்ட பல-கூறு தொலைநிலை இணைப்புடைய குறுக்கீட்டுமானி வலைப்பின்னல்) ரேடியோ வரிசையைப் பயன்படுத்தி இந்தக் கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
  • இக்குழு பாலோமர் (Palomar) மாதிரியிலிருந்து அருகிலுள்ள 280 விண்மீன் திரள்களை ஆய்வு செய்ததுடன், அவற்றின் மையங்களிலிருந்து வெளிப்படும் சிறிய ரேடியோ உமிழ்வுகளையும் கண்டறிந்துள்ளது.
  • வழக்கமான உற்றுநோக்கல்கள் மூலம் கண்டறிவது கடினமான, பலவீனமாகப் பொருட்களை ஈர்க்கும் மிகப்பாரிய கருந்துளைகளை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
  • கருந்துளை செயல்பாட்டை உறுதி செய்வதற்காக, நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே ஆய்வகத்தின் எக்ஸ்-ரே தரவுகள் மூலம் இந்தக் கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்