TNPSC Thervupettagam

மறைமலை அடிகளாரின் 150வது பிறந்தநாள் விழா

July 19 , 2026 8 days 90 0
  • தமிழ் மொழி மற்றும் இலக்கியத்திற்கு மறைமலை அடிகளார் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் வகையில், அவரது 150வது பிறந்தநாள் 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது.
  • மறைமலை அடிகளார் (1876–1950) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர் மற்றும் தனித்தமிழ் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.
  • இவர் 1876 ஆம் ஆண்டில் வேதாசலம் என்ற பெயரில் பிறந்தார், பின்னர் தூய தமிழ் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக 1916 ஆம் ஆண்டில் 'மறைமலை அடிகளார்' என்று தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
  • மெட்ராஸ் கிறித்துவக் கல்லூரியில் 11 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணியாற்றிய இவர், சங்க இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்தம் ஆகியவற்றில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு பங்களித்துள்ளார்.
  • சமஸ்கிருதம் கலந்த வார்த்தைகளின் பயன்பாட்டைக் குறைத்து, தமிழ் அடையாளத்தை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்துவதை தனித்தமிழ் இயக்கம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
  • ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்திலும் புலமை பெற்றிருந்த இவர், தமிழின் வளத்தையும் முக்கியத்துவத்தையும் நிரூபிக்க மேற்கண்ட இந்த மொழிகளைப் பயன்படுத்தினார்.
  • சென்னைக் கன்னிமரா பொது நூலக வளாகத்தில் அமைந்துள்ள மறைமலை அடிகளார் நூலகமானது அவரது புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பாதுகாத்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்