நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை அமைப்பின் (அல்லது குவாட்) நான்கு உறுப்பினர் நாடுகளுடைய (இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா) கடற்படைகள் 25வது மலபார் பயிற்சியில் பங்கேற்கின்றன.
இது பசிபிக் பெருங்கடலிலுள்ள குவாம் கடற்கரையருகே தொடங்கியது.
மலபார் பயிற்சியானது 1992 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே ஓர் இருதரப்பு கடற்படைப் பயிற்சியாகத் தொடங்கப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் ஜப்பான் இணைந்ததையடுத்து இப்பயிற்சி ஒரு முத்தரப்பு பயிற்சியாக மாறியது.