மூன்று வயது குழந்தைக்குத் தீவிர போலியோ (wild polio) பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டதை அடுத்து மலாவி அங்கு தீவிர போலியோ பெருந்தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவித்தது.
ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட இவ்வகையான முதல் பாதிப்பு இதுவேயாகும்.
2020 ஆம் ஆண்டில், ஆப்பிரிக்கக் கண்டமானது அனைத்து வகையான தீவிர போலியோவிலிருந்து விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது.
உலகில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே இன்னும் தீவிர போலியோ பாதிப்பு உள்ளது.