இந்தியப் பயணிகள் இனி மலேசியாவில் பணம் செலுத்துவதற்கு ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகத்தை (UPI) பயன்படுத்தலாம்.
இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகத்தின் சர்வதேசப் பண வழங்கீட்டு லிமிடெட் ((NPCI-NIPL) மற்றும் ரேஸர்பே கர்லெக் இடையேயான கூட்டாண்மை மூலம் இந்த விரிவாக்கம் மேற்கொள்ளப் படுகிறது.
UPI வசதியாக்கப்பட்ட செயலிகள் மூலம் பரிவர்த்தனைகள் ஆனது உடனடியாகவும், பாதுகாப்பானதாகவும் மற்றும் தடையற்றவையாகவும் உள்ளன.
இந்த முன்னெடுப்பு ஆனது 2025 ஆம் ஆண்டு உலக நிதி சார் தொழில்நுட்ப நிகழ்ச்சியின் (GFF) போது தொடங்கப் பட்டது.