TNPSC Thervupettagam

மலேரியா அற்ற சீனா

July 3 , 2021 1502 days 568 0
  • 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 அன்று சீனாவிற்கு மலேரியா அல்லாத நாடு என உலக சுகாதார அமைப்பினால் சான்றளிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த நான்கு ஆண்டுகளாகவே தொடர்ச்சியாக சீனாவின் உள்நாட்டுப் பகுதியில் மலேரியா  எதுவும் பதிவாகவில்லை.
  • குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நோய் பதிவாகாத நிலையை எட்டிய நாடுகள் உலக சுகாதார அமைப்பின் மலேரியா அல்லாத நாடு எனும் சான்றிதழைப் பெற விண்ணப்பிக்கலாம்.
  • உலக சுகாதார அமைப்பின் மலேரியா அற்ற நாடு சான்றிதழைப் பெற்ற 40வது நாடு சீனாவாகும்.
  • 2021 ஆம் ஆண்டில் எல்சால்வெடார் நாடும் இந்தச் சான்றிதழைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்