சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள மலை மகாதேஷ்வர் வனவிலங்குச் சரணாலயத்தைப் புலிகள் காப்பகமாக அறிவிக்க கர்நாடக மாநில அரசு முன்மொழிந்துள்ளது.
இது தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் ஒப்புதலை எதிர்நோக்கியுள்ளது.
கர்நாடகாவில்
இது அறிவிக்கப் பட்டால், சாம்ராஜ்நகர் மாவட்டமானது நாட்டில் மூன்று புலிகள் காப்பகத்தைக் கொண்டுள்ள ஒரு தனித்துவமான புகழைப் பெற இருக்கின்றது.
இது ஏற்கனவே பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் பிலிகிரி ரங்கநாதர் கோயில் (Biligiri Ranganatha Temple - BRT) புலிகள் காப்பகம் ஆகியவற்றை தனது வரம்பு எல்லைக்குள் கொண்டுள்ளது.
மேலும், இதன் மூலம், கர்நாடகா மாநிலமானது இவை இரண்டைத் தவிர நாகர்ஹோல், பத்ரா, மற்றும் அன்ஷி – தண்டேலி என்று ஆறு புலிகள் காப்பகத்தைக் கொண்டிருக்கும்.