TNPSC Thervupettagam

மலைக் கணவாய்ப் பகுதிகளில் உள்ள சாலைகளின் தாங்கும் திறன்

April 26 , 2024 9 days 73 0
  • பெங்களூருவின் இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM-B) மற்றும் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் (IIT) ஆகியவை முறையே நீலகிரி மற்றும் கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்த மலைக் கணவாய் சாலைகளின் சுமை தாங்கும் திறனை நிர்ணயிக்க தேவையான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளன.
  • இந்த மலை வாசஸ்தலங்களுக்குள் நுழைய அனுமதிக்கப்படும் வாகனங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஒரு உச்சவரம்பினை நிர்ணயம் செய்வது தொடர்பான நீதிமன்றத்தின் கருத்துடன் அரசாங்கம் உடன்பட்டுள்ளது.
  • மேலும், இது சர்வதேச நாடுகளின் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்பவும், நிபுணர் நுண்ணறிவுகளை பயன்படுத்துவதன் மூலமும் சாலைகளின் சுமை தாங்கும் திறனை மதிப்பிட முனைகிறது.
  • UNWTO வழங்கிய 'சுற்றுலா வரும் மக்களை உள்ளடக்கும் திறன்' வரையறையானது, புறநிலை, பொருளாதார, சமூக-கலாச்சார, உயிர் இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் திறன்கள் போன்ற பல்வேறு அளவுருக்களின் கீழ் சுமை தாங்கும் திறனை மதிப்பிடச் செய்வதன் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்