கேரளச் சட்டமன்றம் மலையாளத்தை மாநிலத்தின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக மாற்றும் 2025 ஆம் ஆண்டு மலையாள மொழி மசோதாவினை நிறைவேற்றியது.
இந்த மசோதா, அரசு நிர்வாகம், கல்வி, நீதித்துறை, பொதுத் தொடர்பு, வணிகம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் மலையாளத்தைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்குகிறது.
அனைத்து அரசுப் பள்ளிகளும் 10 ஆம் வகுப்பு வரை மலையாளத்தை முதல் மொழியாகக் கற்பிக்க வேண்டும்.
மேலும், மொழியியல் சிறுபான்மை மாணவர்கள் தங்கள் தாய்மொழியைப் படிப்பதற்கான விதிகளும் உள்ளன.
மசோதாக்கள், அவசரச் சட்டங்கள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் மலையாளத்தில் அறிமுகப் படுத்தப்படும் அல்லது மொழி பெயர்க்கப்படும் என்பதோடுமேலும் அதிகாரப் பூர்வ கடிதப் போக்குவரத்து முதன்மையாக மலையாள மொழியில் மேற் கொள்ளப் படும்.
டிஜிட்டல் கருவிகள் மற்றும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் இணைய ஆளுகையில் மலையாள மொழியில் மேற்கொள்ளப்படும் என்பதோடுமலையாள மொழி மேம்பாட்டு இயக்குநரகம் ஆனது இதன் அமலாக்கத்தினை மேற் பார்வையிடும்.
கன்னட மொழி பேசும் சிறுபான்மையினருக்கான கவலைகள் தொடர்பாக இந்த மசோதா கர்நாடகாவின் எதிர்ப்பை எதிர்கொண்டுள்ளது அதே நேரத்தில் கேரளா அரசியலமைப்பின் 29 மற்றும் 30வது சரத்துகளின் கீழ் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறுகிறது.