தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணற்றில் குவார்ட்ஸ் கல் கருவிகள் கண்டெடுக்கப்பட்ட பிறகு, அங்கு இடைப் பழங்கற்காலத் தளம் இருக்கலாம் என அடையாளம் காணப்பட்டது.
இங்கு கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்களில் பல் பரிமாண செதுக்குக் கல்கள், உள் நோக்கு செதுக்குக் கல்கள், கல் சீவல்கள், பிளவுகள் மற்றும் சீவுளிகள் ஆகியவை அடங்கும்.
மல்லாங்கிணற்றில் உள்ள ஒரு நீர்நிலைக்கு அருகிலுள்ள அடுக்கு நிலைக் குவாரிப் பிரிவில் இந்தக் கல் கருவிகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தக் கருவிகள் ஆனது, இடைப் பழங்கற் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று முதற்கட்ட பகுப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் தளமானது, கீழ் நிலை குண்டாறு படுகையின் ஒரு பகுதியாகும் என்பதோடு மேலும் வண்டல் படிவு (நதி தொடர்பான) செயல்பாடு காரணமாக உருவாக்கப்பட்டது.