TNPSC Thervupettagam

மழைக் காலக் கூட்டத் தொடர்

August 10 , 2019 2105 days 739 0
  • 17வது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடர் 2019 ஆம் ஆண்டு ஜுன் 17 அன்று கூடியது. மாநிலங்களவையின் 249வது கூட்டத் தொடர் 2019 ஆம் ஆண்டு ஜுன் 20 அன்று கூடியது.
  • 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 06 அன்று மக்களவையானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 07 அன்று மாநிலங்களவையானது தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
  • 2019-20 ஆம் ஆண்டிற்கான மத்திய நிதிநிலை அறிக்கையானது 2019 ஆம் ஆண்டு ஜூலை 05 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
  • புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசின் முதலாவது கூட்டத் தொடர் பட்ஜெட் கூட்டத் தொடர் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • மக்களவையின் பட்ஜெட் கூட்டத் தொடரானது 37 அமர்வுகளில் பங்கு பெற்று, 280 மணி நேரங்கள் செயல்பட்டுள்ளது.
  • இக்கூட்டத் தொடரின்போது மொத்தம் 40 மசோதாக்கள் (மக்களவையில் 33 மற்றும் மாநிலங்களவையில் 07) அறிமுகப்படுத்தப்பட்டன.
  • 36 மசோதாக்கள் மக்களவையால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • 32 மசோதாக்கள் மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • 30 மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. புதிய மக்களவை பதவியேற்ற பின்பு அதிக திறனுடன் செயல்பட்ட ஒரே கூட்டத் தொடர் இதுவாகும்.
  • 1952 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை விட அதிக எண்ணிக்கையிலான மசோதாக்கள் இக்கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
  • 1952 ஆம் ஆண்டு முதலாவது மக்களவையின் முதலாவது கூட்டத் தொடரின் போது, இந்த அவை 67 அமர்வுகளில் பங்கு பெற்று, 24 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
  • கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிகமாக மக்களவையின் செயல்பாட்டுத் திறன் 135 சதவீதமாகவும் மாநிலங்களவையின் செயல்பாட்டுத் திறன் 100 சதவீதமாகவும் உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்