TNPSC Thervupettagam

மழைநீர் சேகரிப்பு வழிகாட்டுதல்கள்

November 6 , 2026 15 hrs 0 min 59 0
  • தமிழ்நாடு முழுவதும் மழைநீர் சேகரிப்பு (RWH) கட்டமைப்புகளை கட்டமைத்தல், பராமரித்தல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான வழிகாட்டுதல்களை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் (MAWS) துறை வெளியிட்டது.
  • தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நிபுணர் குழு அளித்த முன்மொழிவுகளின் அடிப்படையில் இந்த வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • மாநிலம் முழுவதும் இந்த நடவடிக்கைகளைச் செயல்படுத்த மாவட்ட ஆட்சியர்களும், உள்ளாட்சி அமைப்புகளும் அரசு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • தமிழ்நாட்டில் 2002 ஆம் ஆண்டு முதல் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • உள்ளூர் மண்ணின் தன்மை மற்றும் கட்டிட வகைகளின் அடிப்படையில் மேற்கூரை மழைநீர் சேகரிப்பு, திறந்தவெளிக் கிணறுகள் மற்றும் உறிஞ்சுகுழிகள் ஆகியவற்றை அமைப்பதற்கான விவரங்களை வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன.
  • நிலத்தடி நீர் செறிவூட்டலை மேம்படுத்த தடுப்பணைகள் மற்றும் கசிவுநீர்க் குட்டைகள் தூர்வாரப்பட வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்