மழைநீர் சேமிப்புப் பிரச்சாரம் (Catch the Rain) – 2022
April 1 , 2022 1333 days 668 0
மணிப்பூர் மாநில முதல்வர் N. பிரேன் சிங் 2022ஆம் ஆண்டின் ஜல் சக்தி அபியான் “மழைநீர் சேமிப்பு” என்ற பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தார்.
மணிப்பூரிலுள்ள அடையாளம் காணப்பட்ட நீர்ப்பற்றாக் குறையுடைய மாவட்டங்கள் மற்றும் மண்டலங்களில் நீர்வளங்காப்பு குறித்த பல்வேறு நடவடிக்கைகளைத் தீவிரப் படுத்தும் நோக்கத்துடன் இந்தப் பிரச்சாரமானது தொடங்கப்பட்டது.
இந்தப் பிரச்சாரத்தின் கருத்துரு, “மழை பொழியும் போதே, பொழியும் இடத்திலேயே அதைச் சேமியுங்கள்” என்பதாகும்.