கோவா கப்பல் கட்டும் நிறுவனம் (GSL) ஆனது, கோவாவில் சமுத்திர பிராச்செட் எனப்படும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இரண்டாவது மாசுக் கட்டுப்பாட்டு கப்பலினை (PCV) அறிமுகப்படுத்தியுள்ளது.
சமுத்திர பிராச்செட் கப்பலானது, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட சமுத்திர பிரதாப் எனும் முதல் PCV கப்பலினை அடுத்து அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.
இந்தக் கப்பலானது எண்ணெய்க் கசிவுகளை சேகரிப்பதற்கான இரண்டு பக்கவாட்டு தூர்வாரும் ஆயுதங்கள், எண்ணெய் படலங்களைக் கண்டறிவதற்கான நவீன ரேடார் கருவி மற்றும் மீட்கப்பட்ட எண்ணெயைக் கப்பலின் குழை வழியே ஏற்றி, பகுப்பாய்வு செய்து, பிரித்துச் சேமிப்பதற்கான உபகரணங்களைக் கொண்டுள்ளது.
இந்தக் கப்பலானது, சுமார் 72% அளவு உள்நாட்டு உள்ளடக்கத்துடன் GSL நிறுவனத்தால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டது.