TNPSC Thervupettagam

மாசுபட்ட இடங்களின் மேலாண்மைக்கான புதிய விதிகள் 2025

August 2 , 2025 14 hrs 0 min 16 0
  • சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுபட்ட தளங்களின் மேலாண்மை) விதிகளை அறிவித்தது.
  • கதிரியக்கம், சுரங்கம், எண்ணெய் கசிவு மற்றும் திடக்கழிவு பாதிப்புகளைத் தவிர்த்து, 2016 ஆம் ஆண்டு அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் விதிகளின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ள 189 அபாயகரமான பொருட்களை இந்த விதிகள் உள்ளடக்குகின்றன.
  • உள்ளாட்சி அமைப்புகள் சந்தேகத்திற்குரிய இடங்கள் குறித்து ஆண்டிற்கு இரண்டு முறை புகாரளிக்க வேண்டும்; மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCBs) அப் பகுதியினை மதிப்பீடு செய்து அதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (CPCB) தெரிவிக்க வேண்டும்.
  • மாசுபடுத்தும் அமைப்புகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைப் பயன்படுத்தி அப்பகுதியினை சுத்தம் செய்வதற்கு நிதியளிக்க வேண்டும்; மாசுபடுத்தும் அமைப்புகளைக் கண்டறிய முடியவில்லை என்றால், SPCB வாரியங்கள் அதனைச் செயல்படுத்தும், அரசாங்கங்கள் அதற்கான நிதியினை அளிக்கலாம்.
  • மாசுபடுத்தும் அமைப்புகள் 3 மாதங்களுக்குள் அதற்கான செலவுகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும்; புதிய நில உரிமையாளர்களும் அதற்கான பொறுப்பினைக் கொண்டிருப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்