மாசுபட்ட இடங்களின் மேலாண்மைக்கான புதிய விதிகள் 2025
August 2 , 2025 20 days 70 0
சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுபட்ட தளங்களின் மேலாண்மை) விதிகளை அறிவித்தது.
கதிரியக்கம், சுரங்கம், எண்ணெய் கசிவு மற்றும் திடக்கழிவு பாதிப்புகளைத் தவிர்த்து, 2016 ஆம் ஆண்டு அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் விதிகளின் கீழ் பட்டியலிடப் பட்டுள்ள 189 அபாயகரமான பொருட்களை இந்த விதிகள் உள்ளடக்குகின்றன.
உள்ளாட்சி அமைப்புகள் சந்தேகத்திற்குரிய இடங்கள் குறித்து ஆண்டிற்கு இரண்டு முறை புகாரளிக்க வேண்டும்; மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCBs) அப் பகுதியினை மதிப்பீடு செய்து அதனை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (CPCB) தெரிவிக்க வேண்டும்.
மாசுபடுத்தும் அமைப்புகள் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைப் பயன்படுத்தி அப்பகுதியினை சுத்தம் செய்வதற்கு நிதியளிக்க வேண்டும்; மாசுபடுத்தும் அமைப்புகளைக் கண்டறிய முடியவில்லை என்றால், SPCB வாரியங்கள் அதனைச் செயல்படுத்தும், அரசாங்கங்கள் அதற்கான நிதியினை அளிக்கலாம்.
மாசுபடுத்தும் அமைப்புகள் 3 மாதங்களுக்குள் அதற்கான செலவுகளைத் திருப்பிச் செலுத்த வேண்டும்; புதிய நில உரிமையாளர்களும் அதற்கான பொறுப்பினைக் கொண்டிருப்பர்.