இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பானது மாடர்னா நிறுவனத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.
சிப்லா மும்பையில் அமைந்துள்ள ஒரு மருந்து உற்பத்தி நிறுவனமாகும்.
இது நாட்டில் அவசரகாலப் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்படும் நான்காவது தடுப்பு மருந்தாகும்.
தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிசீல்டு மற்றும் ஸ்புட்நிக் ஆகிய மூன்று கோவிட் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன.