TNPSC Thervupettagam

மாணவர் ஊட்டச்சத்துத் திட்டம் - தெலுங்கானா

June 19 , 2026 15 hrs 0 min 36 0
  • கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, தெலுங்கானா அரசு தனது 'காலை உணவு மற்றும் பால் வழங்கும் திட்டத்தை' தொடங்கியுள்ளது.
  • இத்திட்டமானது மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் இளையோர் கல்லூரிகளில் மழலையர் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களை உள்ளடக்கியது.
  • மாநில அரசு இதற்காக ஆண்டுதோறும் ₹720 கோடி ஒதுக்கியுள்ளது. இதில் காலை உணவுக்கு ₹540 கோடியும், பால் மற்றும் கேழ்வரகு மால்ட் விநியோகத்திற்காக ₹180 கோடியும் அடங்கும்.
  • அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் சுமார் 29 லட்சம் மாணவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்பட உள்ளது.
  • இத்திட்டத்தின் முதல் கட்டமானது எட்டு மாவட்டங்களில் உள்ள 1,302 கல்வி நிறுவனங்களை (1,269 அரசுப் பள்ளிகள் மற்றும் 33 இளையோர் கல்லூரிகள்) உள்ளடக்கியதுடன், இதன் மூலம் சுமார் 1.44 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்