TNPSC Thervupettagam

மாணவிகளுக்கான சைனிக் பள்ளிகள்

August 18 , 2021 1462 days 824 0
  • இந்தியா  முழுவதுமுள்ள சைனிக் பள்ளிகளில் இனி மாணவிகளுக்கும் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்தார்.
  • 2.5 வருடங்களுக்கு முன்பு மிசோரத்திலுள்ள சைனிக் பள்ளிகளில் பெண்களுக்கு முதன்முதலில் அனுமதி வழங்கப்பட்டது.
  • சைனிக் பள்ளிகள் என்பது சைனிக் பள்ளிகள் சங்கம் என்ற அரசின் ஓர் அமைப்பின் மூலம் நிறுவப்பட்டு மேலாண்மை செய்யப்படும் ஒரு பள்ளி ஆகும்.
  • இது பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
  • இது 1961 ஆம் ஆண்டில் அப்போதையப் பாதுகாப்புத் துறை அமைச்சர் V.K. கிருஷ்ண மேனன் அவர்களால் திட்டமிடப்பட்டு நிறுவப்பட்டது.
  • தற்போது இந்தியாவில் 33 சைனிக் பள்ளிகள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்