அடல் மேம்பாட்டு ஆய்வகங்களின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான மாணாக்கர் தொழில்முனைவுத் திட்டத்தின் 3வது பதிப்பானது தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டமானது லா பவுண்டேசன் டசால்ட் சிஸ்டெம்ஸ் என்ற அமைப்புடன் இணைந்து நிதி ஆயோக்கின் அடல் புத்தாக்க திட்டத்தினால் தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் 3வது பதிப்பின் கருத்துரு, “Made in 3D – Seed The Future Entrepreneurs Program” என்பதாகும்.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொருப் பள்ளியிலிருந்தும் 6 மாணாக்கர்கள் மற்றும் ஓர் ஆசிரியர் அடங்கிய குழுவிற்கு, அவர்களின் சொந்தப் புத்தாக்க நிறுவனம் மற்றும் அதன் வடிவமைப்பை உருவாக்குவதற்கான ஆதார நிதியானது (Seed Funding) வழங்கப் படும்.