புகழ்பெற்ற இந்தியச் சூழலியலாளர் மாதவ் காட்கில் காலமானார்.
மாதவ் காட்கில் (1942–2026) மேற்குத் தொடர்ச்சி மலைகளில், குறிப்பாக நீலகிரி உயிர்க் கோளக் காப்பகத்தில் (NBR) சுற்றுச்சூழல் ஆராய்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தார்.
யுனெஸ்கோ அமைப்பின் மனிதன் மற்றும் உயிர்க்கோளம் (MAB) திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் உயிர்க்கோளக் காப்பகமான நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்திற்கான கருத்து ஆவணத்தை அவர் எழுதியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தை அவர் நிறுவினார்.
அவர் மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் (WGEEP) தலைவராக இருந்தார் என்ற நிலையில் அக்குழு 2011 ஆம் ஆண்டில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்தது.
மேற்குத் தொடர்ச்சி மலைகளின் பல்லுயிர் முக்கியத்துவம் மற்றும் வளங்காப்புத் தேவைகளை எடுத்துக்காட்டுவதற்கு அவரது பணி உதவியது.