இந்தியத் தலைமைப் பதிவாளர் அலுவலகமானது (RGI) 2021 ஆம் ஆண்டு மாதிரிப் பதிவு அமைப்பின் (SRS) அறிக்கையினைச் சமீபத்தில் வெளியிட்டது.
2014–16 ஆம் ஆண்டில் ஒரு லட்சம் குழந்தைப் பிறப்புகளுக்கு 130 ஆக இருந்த நாட்டின் பேறுகாலத் தாய்மார்கள் உயிரிழப்பு விகிதம் (MMR) ஆனது, 2019–21 ஆம் ஆண்டில் 37 புள்ளிகள் குறைந்து 93 ஆக இருந்தது.
2014 ஆம் ஆண்டில் 1000 குழந்தைப் பிறப்புகளுக்கு 39 ஆக இருந்த நாட்டின் குழந்தை உயிரிழப்பு விகிதம் (IMR) ஆனது, 2021 ஆம் ஆண்டில் 27 ஆகக் குறைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 1000 குழந்தைப் பிறப்புகளுக்கு 26 என்ற அளவாக இருந்த பச்சிளம் குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் (NMR) ஆனது, 2021 ஆம் ஆண்டில் 19 என்பதாகக் குறைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 1000 குழந்தைப் பிறப்புகளுக்கு 45 ஆக இருந்த ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு விகிதம் (U5MR) ஆனது 2021 ஆம் ஆண்டில் 31 என்பதாகக் குறைந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 899 ஆக இருந்த பிறப்பின் போதான பாலின விகிதம் ஆனது, 2021 ஆம் ஆண்டில் 913 ஆக மேம்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில் 2.0 ஆக நிலை பெற்றுள்ள மொத்த கருவுறுதல் விகிதம் ஆனது 2014 ஆம் ஆண்டில் பதிவான 2.3 என்ற விகிதத்தில் இருந்து குறிப்பிட்ட முன்னேற்றத்தினைக் குறிக்கிறது.
எட்டு (8) மாநிலங்கள் ஆனது MMR விகிதத்தில் SDG இலக்கை (2030 ஆம் ஆண்டில் MMR <=70) அடைந்துள்ளன.
இதில் பன்னிரண்டு (12) மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் U5MR விகிதத்தில் SDG இலக்கை (2030 ஆம் ஆண்டில் U5MR <=25) அடைந்துள்ளன.
ஆறு (6) மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்கள் NMR விகிதத்தில் SDG இலக்கை (2030 ஆம் ஆண்டில் NMR <=12) அடைந்துள்ளன.