மாதிரிப் பதிவு முறை (SRS) புள்ளியியல் அறிக்கை 2020
September 29 , 2022 1045 days 488 0
இந்த அறிக்கையினை இந்தியத் தலைமை பதிவாளர் அலுவலகமானது சமீபத்தில் வெளியிட்டது.
பின்வரும் குறிகாட்டிகளில் 2014 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பிடத்தக்க சரிவு காணப் படுவதையும், 2030 ஆம் ஆண்டிற்குள் நிலையான மேம்பாட்டு இலக்குகளை (SDGs) அடைவதற்கான பாதையில் இந்தியா தற்போது உள்ளது என்பதையும் இந்த அறிக்கை வெளிப்படுத்தியது.
குழந்தை இறப்பு விகிதம் (IMR),
5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR),
பச்சிளம் குழந்தை இறப்பு விகிதம் (NMR).
2019 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 30 ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதமானது, 2020 ஆம் ஆண்டில் 2 புள்ளிகள் குறைந்து 1,000 பிறப்புகளுக்கு 28 ஆக குறைந்துள்ளது.
இதன் ஆண்டு சரிவு விகிதமானது 6.7 சதவீதம் ஆகும்.
இதில் கிராமப்புற நகர்ப்புற வேறுபாடு 12 புள்ளிகளாக குறைந்துள்ளது.
5 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளின் இறப்பு விகிதமானது ஆண் குழந்தைகளை விட அதிகமாக உள்ளது.
5 வயதிற்குட்பட்ட ஆண் குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் 4 புள்ளிகளும், 5 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் இறப்பு விகிதத்தில் 3 புள்ளிகளும் குறைந்துள்ளன.
உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகபட்சமாக 5 புள்ளிகள் சரிவினைக் கண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 22 ஆக இருந்த பச்சிளம் குழந்தைகளின் இறப்பு விகிதமானது, 2020 ஆம் ஆண்டில் 1,000 பிறப்புகளுக்கு 20 ஆக குறைந்தது.
இது 9.1 சதவீத வருடாந்திரச் சரிவாகும்.
ஆறு மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் ஏற்கனவே 2030 ஆம் ஆண்டிற்குள் 1,000 பிறப்புகளுக்கு 12 இறப்புகள் என்ற அளவிற்கு குறைவான பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதத்தினை அடைய வேண்டும் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் நீடித்த மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைந்துள்ளன.
இதில் கேரளா (4), டெல்லி (9), தமிழ்நாடு (9), மகாராஷ்டிரா (11), ஜம்மு காஷ்மீர் (12) மற்றும் பஞ்சாப் (12) ஆகியவை அடங்கும்.